உலக கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை இந்திய அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
அதுமட்டுமின்றி துணை கேப்டன் பதவியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இனி இந்திய அணியின் கேப்டன் பதவிக்கான வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெறமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை ஏன் கேப்டனாக நியமிக்கவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளார். “ஹர்திக் பாண்டியா அணிக்கு முக்கியமான வீரர். அவர் திறமையான வீரராக இருந்தாலும், அவரது உடற்தகுதி சவாலாகவே உள்ளது. இந்திய அணிக்கு எப்பொழுதும் விளையாட தகுதியான கேப்டன் தேவை,” என்றார்.