கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை எந்தவொரு உடன்பாடும் இல்லாமல் முடிந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் அடுத்தடுத்த மோதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் உள்நாட்டு அமைப்புகள் மற்றும் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பின் நடவடிக்கைகள் பாகிஸ்தான் எல்லை பகுதியை பாதித்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த வெள்ளியன்று பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததில் 3 கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். இதனால் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் நாடு அமைதியைப் பேணுமாறு அழைத்திருந்தாலும், பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை. பாகிஸ்தான் கூறுவதன் படி, ஆப்கான் அரசு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பை கட்டுப்படுத்த தவறியதால் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதற்கு எதிராக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது எல்லைப்பகுதியை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டுகள் செய்துள்ளது.
இந்நிலையில், எல்லைப்பகுதிகளில் மோதல் ஏற்பட வாய்ப்பும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மேலும் சிக்கலாகும் அபாயமும் உள்ளது. சர்வதேச அமைப்புகள் குற்றச்சாட்டுகளை கவனித்து, இரு தரப்பினரையும் அமைதிப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.