சென்னை: செய்தியாளர்கள் மற்றும் சமூக ஊடக கருத்தாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஊடக சுதந்திரத்தை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக உரிமைகள் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் என தெரிவித்துள்ளார்.
அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்வதும், மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதும் இயல்பான ஜனநாயக நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமர்சனங்களுக்கு பதிலாக கைது மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல என்றும், கருத்துக்கு கருத்து என்ற முறையிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் அச்சமின்றி பணியாற்ற தேவையான சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.