சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எந்தெந்த ரெயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான பட்டியலை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு தெற்கு ரெயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது.
ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது, மாநிலம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த விரிவான விவரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
இதையடுத்து, அந்த பட்டியலை அடுத்த வாரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.