துபாய்: துபாயில் சாலையின் நடுவில் நின்றிருந்த லாரி மீது மினிபஸ் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், பல இந்திய தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
துபாயில் நிகழ்ந்த சோகமான சாலை விபத்தில் பல இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையின் நடுவில் நின்றிருந்த லாரி மீது மினிபஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கவனக் குறைவு மற்றும் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காததே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.