மிர்புர்: வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மிர்புரில் நடைபெறுகிறது.
3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மிர்புரில் நடைபெறுகிறது.
2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்த இரு அணிகளும் நேரடி ஒருநாள் தொடரில் மோதுவது இதுவே முதல் முறையாகும். ஜோஷ் இங்லிஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இழந்த நிலையில் களமிறங்குகிறது.
உள்ளூரில் தொடர்ந்து 4 ஒருநாள் தொடர்களை வென்றுள்ள வங்காளதேச அணியும் வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. இதனால் போட்டியில் கடும் விறுவிறுப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.