புதுடில்லி: இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, திருமாவளவன் மற்றும் சுப்ரியா சுலே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணி முறிவால் திமுக இந்தக் கூட்டத்தை புறக்கணித்தது. அதேபோல் எம்.பி.க்களை கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதால் தவெகவும் இதில் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் என்று கார்கே அறிவித்தார்.