புதுடில்லி: ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை 50 வயது வரை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு புதிய விதிமுறைகளை பரிசீலித்து வருகிறது. தற்போது ஓட்டுநர் உரிமம் பொதுவாக 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிலையில், அதனை உரிமம் பெற்றவர் 50 வயதை அடையும் வரை செல்லுபடியாகும் வகையில் மாற்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில் உரிமம் புதுப்பித்தல் மற்றும் பிற சேவைகளை முழுமையாக டிஜிட்டல் தளங்கள் மூலம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு எளிதான சேவைகளை வழங்குவதற்காக இந்த மாற்றங்கள் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.