இங்கிலாந்து: இந்தியா-இங்கிலாந்து டி20 தொடரின் போட்டி நேரம் இந்திய ரசிகர்களுக்காக ஒரு மணி நேரம் முன்னோக்கி மாற்றப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் டி20 தொடரில் சில போட்டிகள் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் இந்திய நேரப்படி போட்டிகள் இரவு 11 மணிக்கு தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு போட்டிகளை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்க இங்கிலாந்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் இந்திய ரசிகர்கள் இரவு 10 மணி முதலே போட்டியை காண முடியும்.