புதுடில்லி: தேர்தல் முறைகேடுகள் குறித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பவும், கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல் முறைகேடுகள், வாக்கு திருட்டு மற்றும் SIR விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கூட்டாக கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும், நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியதற்கான பொறுப்பை கல்வி அமைச்சகம் ஏற்க வேண்டும் என்று கார்கே வலியுறுத்தினார்.