தேவையான பொருட்கள்
ஓட்ஸ் தூள் ¼ கப்
ஆப்பிள் ப்யூரி ¼ கப்
தண்ணீர் ½ கப்
நெய் ½ தேக்கரண்டி
நட்ஸ் தூள் ½ தேக்கரண்டி
செய்முறை
ஓட்ஸை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பிறகு பொடித்த ஓட்ஸை தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது ஆப்பிள் கூழ் சேர்க்கவும். இவை வெந்ததும் நர்ஸ் பவுடர் மற்றும் நெய் சேர்த்து கிளறவும். பிறகு அதை அடுப்பிலிருந்து இறக்கி குழந்தைக்கு ஊட்டவும். இந்த உணவை 6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு.