மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைய துவங்கியுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 11,736 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10,706 கன அடியாக குறைந்தது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் நேற்று காலை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியில் இருந்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தை விட மேட்டூர் அணைக்கு நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது.
அணையின் நீர்மட்டம் நேற்று 114.91 அடியாகவும், நீர் இருப்பு 85.58 டிஎம்சியாகவும் இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நேற்று காலை முதல் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.