பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
2020-ல் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், தான் இறுதிவரை வசித்த சென்னை காம்தார் நகர் பகுதிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் அல்லது தெரு என பெயரிட வேண்டும் என அவரது மகன் எஸ்பிபி சரண் முதல்வர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில் அவர் கடைசி மூச்சு வரை வாழ்ந்த காம்தார் நகர் சாலையின் பெயரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ அல்லது நகர் என மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதுவே அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பமும் வேண்டுகோளும் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்.