திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு கங்கையம்மன் திருக்கோவிலில் மூன்றாமாண்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம், பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற தீமிதி நிகழ்ச்சியில் விரதம் இருந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததுடன், அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.