கபிஸ்தலம்: கபிஸ்தலம் அருகே உள்ள ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர், ஐயனார் மற்றும் பாப்பாத்தி அம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரத்தில் உள்ள ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர், ஸ்ரீ ஐயனார் மற்றும் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் திருக்கோவில்களில் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.