சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்த சமந்தா தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சமந்தா மலையாள படங்களில் நடிக்கவில்லை என்ற குறையை தற்போது பூர்த்தி செய்ய உள்ளார். அடுத்ததாக மம்முட்டியுடன் சமந்தா ஜோடி சேரவுள்ள படத்தை மம்முட்டி தயாரிக்கவுள்ளார்.
அடுத்ததாக ஷாருக்கானுடனும் நடிகை சமந்தா பாலிவுட்டில் நாயகியாக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் -சமந்தா இணையவுள்ள இந்தப் படம் விரைவில் சூட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து சமந்தா ஆக்டிவாக காணப்படுகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் 35.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
நடிகர் சமந்தா தொடர்ந்து தமிழ். தெலுங்கு ஹிந்தி மொழி படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் நடித்து வந்த சமந்தா, தொடர்ந்து முன்னணி நடிகையாகவே இருந்தபோது பிரபல தெலுங்கு பட நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மனக்கசப்பு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்த பிரச்சனைகளில் சிக்கித் தவித்த சமந்தா இடையில் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி ஒரு ஆண்டு பிரேக் எடுத்துக்கொண்டார்.
இந்த நேரத்தில் அவர் தனது நோய் பாதிப்பிற்கு வெளிநாடுகளில் சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். இன்னிலையில் தற்போது மீண்டும் சமந்தா படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படும் சமத்தா அடுத்தடுத்த பிட்னஸ் வீடியோக்கள், விளம்பர வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக மலையாளத்தில் மம்முட்டியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாக உள்ள படத்திலும் சமந்தா கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் மூலம் மலையாளத்தில் சமந்தா என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதேபோல அடுத்ததாக சமந்தா பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானுடன் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின்மூலம் சமந்தா முதல் முறையாக பாலிவுட் படத்தில் என்ட்ரியாகவுள்ளார். முன்னதாக வெப்தொடர்களில் நடித்துள்ள சமந்தா இந்தப் படம் மூலம் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் திரைப்படங்களின் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார் சமந்தா. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தன்னுடைய பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் சமந்தாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழிலும் சமந்தா நடிப்பில் படங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சமந்தா ஸ்காட்லாந்தில் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ளார். அடுத்தடுத்து அவர் தான் தங்கியுள்ள இடத்தில் புகைப்படங்களை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். பழமையான காட்டேஜ் ஆக காணப்படும் இந்த இடம் மிக சிறப்பாக காணப்படுகிறது. மிகவும் அமைதியான சூழலில் ஆடுகள் மேய்ந்து வரும் காட்சிகளையும் இந்த பதிவில் சமந்தா இணைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வருகிறது. சமந்தாவை instagram-ல் 35.5 மில்லியன் பாலோயர்கள் பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.