சென்னை: தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குநர் என்றால் அது ஷங்கர்தான். ஒரு காலகட்டத்தில் தனது படங்களில் இடம் பெறும் பாடல்களில் மட்டும் பிரம்மாண்டமான செட்களை அமைத்து காட்சிப்படுத்தி வந்தார். அதன் பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் படம் முழுக்க தனது பிரமாண்டத்தை காட்டத் தொடங்கிவிட்டார். இதுமட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்களின் மிகவும் விருப்பமான இயக்குநராக மாறினார். இவரது படங்கள் ரிலீஸ் ஆனாலே இமாலய வசூல் வேட்டை நடத்துவதால் இவர் தனக்கு படம் செய்யமாட்டாரா என காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஏராளம்.
அதேபோல் இவரது படத்தில் ஒரு நடிகை நடிக்கின்றார் என்றால், அந்த படத்திற்குப் பின்னர் அந்த நடிகையின் மார்க்கெட் தானாகவே உயர்ந்து விடும். இதனை சரியாக பயன்படுத்தி சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிய நடிகைகளும் உள்ளனர். தனது மார்க்கெட்டினை சரியாக பயன்படுத்தாமல் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நடிகைகளும் உள்ளனர்.
சிவாஜி படத்தின் வெற்றிக்குப் பின்னர் அந்த படத்தின் நடித்த நடிகை ஸ்ரேயா தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் செம கிளாமராக உடை அணிந்துகொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். இதுமட்டும் இல்லாமல், ஷங்கரின் கதாநாயகி, சூப்பர் ஸ்டாரின் ஜோடி என்ற எண்ணத்திலேயே இருந்தார். இதனால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்ரேயாவை மெல்ல மெல்ல ஓரம் கட்டினர்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ள படம் இந்தியன் 2. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதேபோல் இவரது இயக்கத்தில் உருவாகி வரும் மற்றொரு படம் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படம்தான். இந்த படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகின்றார். இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகின்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பயோபிக்கில் தோனியின் மனைவி சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் ரீச் ஆனார். அதன் பின்னர் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் சீரிஸில் நடித்தும் பாராட்டுகளைப் பெற்றார். படங்களில் ஓவர் கிளாமராக வருவதென்றால் கியாரா அத்வானிக்கு பொங்கல் சாப்பிடுவதைப்போல என கூறும் அளவிற்கு படு கிளாமராக நடித்தும் வருகின்றார்.
கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் நடத்தும் போட்டோ சூட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள போட்டோ அவரது ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்டிங்கில் உள்ளது. அதில் உள்ளாடையாக அணியவேண்டிய ஆடையை மேலாடையின் வெளிப்புறத்தில் வைத்து தைத்து போட்டு போட்டு சூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோ சூட்டில் எடுக்கப்பட்ட ஆறு போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கியாரா அத்வானி. மேலும் இதே உடையில் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த போட்டோக்களைப் பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோ சூட் குறித்து கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டு ரசிகர்களோ பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடித்தாலே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் யோசிப்பாங்களோ என கமெண்ட் செய்து வருகின்றனர். கியாரா அத்வானியின் இந்த புகைப்படங்களுக்கு ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் லைக் போட்டுள்ளார்.