அம்பானி வீட்டு திருமணம் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஷாருக்கானின் வீடியோ ஒன்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் திருமண கொண்டாட்டங்கள் பல வாரங்களாக நடந்து வருகிறது. ஆனந்துக்கும் ராதிகாவுக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் முதல் ப்ரீ வேட்டிங் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சர்வதேச பிரபலங்கள் கலந்து கொண்டு பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் ஆனந்த் – ராதிகாவின் 2-வது ப்ரீ வெட்டிங் முந்தைய கொண்டாட்டங்கள் நடந்தன. இதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம் நடந்தது. முன்னதாக, கடந்த வாரம் முதல் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கின. அம்பானி குடும்பம் சங்கீத், ஹல்தி, மெஹந்தி விழா, சிவ சிவ சக்தி பூஜை என பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.
இதையடுத்து நேற்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் அம்பானி மகனின் திருமண விழா நடைபெற்றது. இதில் இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்கள், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்வீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் சூர்யா ஜோதிகா, விக்னேஷ் சிவன் நயன்தாரா, அட்லீ, பிரியா என தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அம்பானி மகன் திருமணத்தில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்த விழாவில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் ஆகியோருடன் கலந்து கொண்டார். இதில் தனது மனைவி ஜெயா பச்சனுடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் கலந்து கொண்டார்.
அம்பானி வீட்டு திருமணம் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஷாருக்கானின் வீடியோ ஒன்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வீடியோவில், நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் சச்சின் டெண்டுல்கரை கை அசைத்தார். மேலும் அங்கிருந்த அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோரின் காலில் விழுந்து வணங்கினார்.
பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான், தனது ரசிகர்களை மட்டுமின்றி, மூத்த நடிகர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஷாருக்கான் உண்மையான ஜெண்டில்மேன் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.