தென்னிந்திய திரைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் திரைப்படங்கள் மக்கள் கவனத்தை பெருமளவு ஈர்த்த படங்கள். தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை முறையை தெரிந்துக்கொள்ள மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். பாலிவுட் நடிகர்களை போல அவர்களும் விலை உயர்ந்த கார், ஆடம்பர பங்களா என சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். அதிலும் சிலர் தனி விமானம் வைத்துள்ளனர். அந்த வகையில் தனி விமானம் வைத்திருக்கும் 5 தென்னிந்திய நடிகர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
ராம் சரண் : ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் உலக அளவில் சிறப்பு வாய்ந்த நடிகராக உருவெடுத்தார் ராம் சரண். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரங்ஜீவியின் மகனான இவர், சொந்தமாக விமானம் வைத்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர்: ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம் சரண் உடன் நடித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். இவரும் சொகுசு வாழ்க்கை வாழ விரும்பும் தென்னிந்திய நடிகர்களில் ஒருவர். காரணம் இவர் சுமார் ரூ.8 கோடி மதிப்பில் சொந்தமாக தனி விமானம் வைத்துள்ளார்.
பிரபாஸ் : பாகுபலி திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகர் பிரபாஸ். தனி விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர்களின் பட்டியலில் இவரும் ஒருவர். இவர் அவ்வப்போது தனது விமானத்தில் ரைட் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் : சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் நடிகர் அல்லு அர்ஜூன். குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை என அனைவரும் ரசிக்கும் படியாக புஷ்பா கதாப்பாத்திரத்தில் ந டித்திருந்தார். இவர் சமீபத்தில் 6 இருக்கைகள் கொண்ட தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா : தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக தனது வெற்றி படங்கள் மூலம் ஹிட் கொடுத்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்ல நிக வாழ்க்கையிலும் ஹீரோக்களுக்கு இணையான வாழ்க்கை முறையை தான் வாழ்கிறார். இவர் சமீபத்தில் தனது கணவர் விக்னேஷ் ஷிவனுடன் இணைந்து தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.