சென்னை: நடிகர் ஆர்யாவின் 40-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகைகள் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா சமூக வலைதள பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நடிகர் ஆர்யா தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ மற்றும் ‘சர்பட்டா 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவரது 40-வது திரைப்படத்தை இயக்குநர் நிகில் முரளி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த நடிகைகள், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். விரைவில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.