தென்னிந்திய திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கவனம் பெற்ற பி.எஸ்.வினோத் ராஜ், ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் உலகளவில் வெற்றி பெற்று தற்போது சூரி, அன்னா பென் நடித்த ‘கொட்டுகாளி’ படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்த படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தனது அனுபவங்களை விவரித்து கடிதம் எழுதி ‘கொட்டுகாளி’ படத்தின் சிறப்பை பாராட்டினார்.
கமலின் கடிதம் மற்றும் பாராட்டு குறித்து கருத்து தெரிவித்த பி.எஸ்.வினோத் ராஜ், “உங்கள் கடிதமும் பாராட்டும் மனதைத் தொடுகிறது சார். என் படத்தைப் பார்த்து பாராட்டுவார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். இப்போது உங்கள் மூலமாக அது நடந்துள்ளது சார்” என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினார்.
கமல்ஹாசன், “சினிமா என்பது ஒரு தனி மொழி. அது உங்களுக்கு இயல்பாக வரும். அதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். வினோத்தின் திறமையை உணர்ந்து, தயாரித்த, அவருடன் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
படம் சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படத்தில் நீங்கள் எவ்வளவு துணிச்சலாக சில முடிவுகளை எடுத்தீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக, இசை வேண்டாம் என்ற முடிவுதான் படத்துக்கு சரியான முடிவு. ‘கொட்டுகாளி’க்கும் அதன் இயக்குனருக்கும் பாராட்டுக்கள், “இத்தகைய துணிச்சலான முடிவை எடுத்ததற்கு மகத்தான பாராட்டு” என்று கூறியுள்ளார்.