சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு புதிய உத்தரவு

சென்னை : நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்த சொகுசுகாருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதன்பின், வரி பாக்கியை செலுத்திவிட்டார்.
ஆனால், உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டுவிட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது. தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு விஜய்க்கு எந்த அடிப்படையில் அபராதம் விதித்தது? அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.