ஐதராபாத்: ‘பெத்தி’ படத்தில் ஜான்வி கபூர் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நடிகை நித்யா மேனன் மற்றும் அனு அகர்வால் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
‘பெத்தி’ திரைப்படத்தில் ஜான்வி கபூர் கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து பல திரையுலக பிரபலங்கள் ஜான்வி கபூருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகை நித்யா மேனன் அளித்த பேட்டியில், நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை தெளிவாக வகுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை ஒரு பொருளாக பார்ப்பதை ஏற்க முடியாது என்ற உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதேபோல் அனு அகர்வால், பெண்கள் கண்ணியத்துடன் சித்தரிக்கப்பட வேண்டும் என்றும், நடிகைகளும் தாங்கள் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.