ஜெயிலர் 2 படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 173வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது கோலிவுட்டில் பெரும் சுவாரசியத்தை உருவாக்கியுள்ளன. இதுவரை ஹெச்.வினோத் மற்றும் விவேக் ஆத்ரேயா ஆகியோரின் பெயர்கள் இயக்குநராகக் குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போதைய தகவலின்படி “மகாராஜா” படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் தான் இந்த புதிய திட்டத்தின் இயக்குநராக இருப்பதாக கூறப்படுகிறது.

நித்திலன், சமீபத்தில் ரஜினியை நேரில் சந்தித்து ஒரு வரிக் கதையை (outline) கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து, உடனடியாக ஒப்புதல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது நித்திலன் முழுமையான திரைக்கதை மீது பணிபுரிந்து வருகிறார்.
இந்த படம் வித்யாசமானதாகவும், எல்லா ரசிகர்களையும் கவரும் வகையில் அமைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் “குரங்கு பொம்மை” மற்றும் “மகாராஜா” போன்ற படங்கள் மூலம் நித்திலன் தனக்கென்று ஒரு தனித்துவமான இயக்க லைக் கொண்டுள்ளார். ரஜினியின் 173வது படம் இவரது இயக்கத்தில் வந்தால், அது புது பரிமாணம் பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
மேலும், இந்த படத்திற்காக ரஜினிகாந்த் இதுவரை பெற்றிராத அளவுக்கு உயர்ந்த சம்பளம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகராக ரஜினி வலுவாக நிலைநிறுத்தப்படுகிறார்.
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், நித்திலனின் கதையை ரஜினி ஏற்றுக்கொண்டது இந்தப் பட திட்டம் துவங்கும் உறுதியான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
பல இயக்குனர்கள் கதைகள் கூறினாலும், நித்திலனின் கதை தான் ரஜினியின் மனதை கவர்ந்திருப்பது முக்கிய அம்சமாகும். இது மட்டுமின்றி, இந்த படம் ரஜினியின் புதிய அவதாரமாக ரசிகர்களைச் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.