தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றிய ராஜ்குமார், “PRK Productions” என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இது ஒரு தனித்துவமான முயற்சி எனக் கருதப்படுகிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான கதைகள், நேர்த்தியான திரைக்காட்சிகள் மற்றும் தரமான படைப்புகளை வழங்கவே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய விழாவில் தமிழ் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். தயாரிப்பு சங்கத்தின் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், பெப்சி சங்கத்தினர், இயக்குநர் சுசீந்திரன், நடிகர் யோகிபாபு ஆகியோர் விழாவில் இருந்தனர்.

ராஜ்குமார், முன்னணி தயாரிப்பாளரான தியாகராஜனின் ஆலோசனையில், சத்ய ஜோதி பிலிம்ஸில் 15 வருட அனுபவம் பெற்றவர். பள்ளிக் காலத்தில் இருந்து தயாரிப்பாளராகும் கனவோடு வளர்ந்த அவர், பத்தாம் வகுப்பில் “PRK Productions” என்ற பெயரை வைத்திருந்தார். அந்த கனவு இப்போது நிஜமாகியுள்ளது.
இந்த நிறுவனத்தின் முதல் படைப்பு, முன்னணி ஹீரோ மற்றும் டைரக்டருடன், மிகச் சிறந்த தொழில்நுட்பக் குழுவினருடன் உருவாக இருக்கிறது. ஒரு பெரிய தயாரிப்பு வேலை துவங்கி விட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இந்த முயற்சி தமிழ் சினிமாவுக்கு புதிய ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.