சென்னை: சல்மான்கானின் சிக்கந்தர் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சல்மான் கானின் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் டீசர் குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். அதில், இன்று மாலை சிக்கந்தர் டீசர் வெளிவரும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ளது.
பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.