சென்னை: நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து காங்கிரஸ் அமைச்சர் கூறிய கருத்துக்கு நடிகை சமந்தா கடுமையாக பதிலளித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் படத்தில் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து செய்தனர். இந்தப் பிரச்சினைக்கான காரணம் குறித்து சமந்தாவும், நாக சைதன்யாவும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், நாக சைதன்யா, சக நடிகையான சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார். சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் தான் பொறுப்பு என்று தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கோண்டா சுரேகா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி சமந்தா போன்ற பல பெண்கள் திருமணம் செய்து கொண்டு திரையுலகத்தை விட்டு வெளியேறினர் என்று குண்டை போட்டார். அமைச்சரின் கருத்துக்கு நடிகரும் சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் சுரேகா தமக்கு எதிராக அவதூறான கருத்தை தெரிவித்துள்ளதாகவும், அதனை உடனடியாக வாபஸ் பெறாவிட்டால் சட்ட ரீதியாக வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கே.டி. ராமராவும் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சமந்தா கடும் கோபத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது: திரையுலகில் பல சிரமங்களை சந்தித்து பெண்ணாக போராடி வருகிறேன்.
அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என் விவாகரத்து பரஸ்பரம் இருந்தது. தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதிக்கவும். பொறுப்புள்ள ஒரு பெண் என்ற முறையில், எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துகள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தவறானவை.
உங்கள் கருத்துக்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும். உங்கள் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்காதீர்கள். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். நான் அப்படியே இருக்க விரும்புகிறேன், என்றார். பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து குறித்த தனது கருத்தை அமைச்சர் சுரேகா வாபஸ் பெற்றார்.