தேவையான பொருட்கள்:
1 கப் போஹா / அவல்
3 உருளைக்கிழங்கு வேகவைத்தது
3 டீஸ்பூன் கடலை மாவு
1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
1 தேக்கரண்டி பூண்டு, பொடியாக வெட்டப்பட்டது
1 டீஸ்பூன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
2 டீஸ்பூன் கொத்தமல்லி
1 தேக்கரண்டி ஆர்கனோ(விருப்பம் இருந்தால்)
உப்பு சுவைக்க
1 டீஸ்பூன் சீரக தூள்
பொரிப்பதற்கு எண்ணெய்
1/2 கப் பிரெட் க்ரம்ஸ்
செய்முறை:
முதலில், அவலைக் கழுவி, சில நொடிகள் ஊறவைத்து, சல்லடையில் வடிகட்டி தனியே வைக்கவும். மறுபுறம் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை மசிக்கவும். அதில் அவல், கடலை மாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஆர்கனோ, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் பச்சை கொத்தமல்லி சேர்க்கவும்.
அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து நக்கெட்ஸ் வடிவத்தில் திரட்டிக்கொள்ளுங்கள். அதை பிரெட் க்ரம்களில் புரட்டி எடுத்து தனியே வைக்கவும். இப்போது எண்ணெயை சூடாக்கி, அதில் அனைத்து நக்கெட்களையும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். சூடான போஹா நக்கெட்களை கெட்ச்அப் அல்லது புதினா சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையுடன் செய்யலாம். இதை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. வேலையும் குறைவு. இன்றே செய்து பாருங்கள்