பருப்பு குழம்பு கேரளா ஸ்டைல் : இந்த பதிவில் கேரளா ஸ்டைலிஷான பருப்பு குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்னைக்கு மதியம் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா..? அப்படி என்ன சமைப்பது என்று யோசித்தால் பருப்பு குழம்பு செய்யவும். நீங்கள் எப்பொழுதும் செய்வது போல் இல்லாமல், ஒரு முறை பருப்பு கறியை கேரளா ஸ்டைலில் செய்து பாருங்கள். இந்த பருப்பு குழம்பு சாப்பிட சுவையாகவும், செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. இப்போது இந்த பதிவில் கேரளா ஸ்டைலிஷ் பருப்பு குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
கேரளா பாணி பருப்பு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 5
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1/4 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
காலிஃபிளவர் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு ஏற்ப
தண்ணீர் – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு செய்ய, முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். பின் குக்கரில் வைத்து மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். விசில் வந்ததும் குக்கரின் மூடியைத் திறந்து பருப்பை நன்றாக மசிக்கவும். இப்போது மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
இதன் பிறகு, அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் மசித்த பருப்பை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மசாலாவின் பச்சை வாசனை போனதும், அடுப்பிலிருந்து இறக்கவும். அடுத்து மற்றொரு அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பருப்பில் ஊற்றவும். அதனுடன் சிறிது நெய் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைல் பருப்பு கறி தயார்.