சாவகசேரி: சாவகச்சேரி வைத்தியருக்கு கடும் தொனியில் பதில் வழங்கி உள்ளார் சட்டவைத்திய அதிகாரி.
சாவகச்சேரி வைத்தியசாலையின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் பிரணவனுக்கும், வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடலானது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியாசகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவின் கேள்விகளுக்கு கடும் தொனியில் பதில் வழங்கும் விதமாக வைத்தியர் பிரணவனின் பதில்கள் அமையப்பெற்றுள்ளன.
வைத்தியசாலை நடவடிக்கை தொடர்பில் அதிகாரபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லையா? என வைத்தியர் அர்ச்சுனா உரையாடலின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் வழங்கும் வைத்தியர் பிரணவன், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஒருவரிடம் எவ்வாறு அதிகாரபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என கடும் தொனியில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.