September 29, 2022

மீன்பிடி தடைக்காலம் 11 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

காரைக்கால்: மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் காரைக்காலை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கும். அதன்படி இன்று காலை (ஏப்ரல் 15) முதல் தொடங்கியதை முன்னிட்டு காரைக்காலில் சுமார் 11,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தடை விதிப்பு காலம் விதிக்கப்பட்டு வருகிறது இந்த காலத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை. இந்த தடை காலத்தை பயன்படுத்தி படகுகளை சரிசெய்தல், இன்ஜின்கள் பராமரித்தல், படகுகளில் வர்ணம் பூசுதல், மீன்பிடி வலைகளை சீரமைத்தல் என பல்வேறு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் தேவையான பராமரிப்பு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!