September 27, 2022

சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் 1,305 பேருக்கு கொரோனா பாதிப்பு

பெய்ஜிங் : சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறப்படுகிறது. அதன்பின், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி தற்போது வரை மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி உள்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனாவிலிருந்து மீண்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவாகி வந்த நிலையில், நேற்றைய தினம் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது. அதனை தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 2,009 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 1,305 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,33,513 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!