November 29, 2022

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் விசர்ஜனம்… 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி

சென்னை: 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு… விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி சென்னையில் இன்று 22,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சென்னையில் இந்து அமைப்புகளின் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலான சிலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்.4) கடலில் கரைக்கப்படுகின்றன. இந்த சிலைகள் கரைப்பதற்காக பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம்,நீலாங்கரை, பல்கலைநகா்,காசிமேடு மீன்பிடித் துறைமுகம்,திருவொற்றியூா் பாப்புலா் எடைமேடை ஆகிய 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகா் சிலை ஊா்வலத்தை அசம்பாவித சம்பவங்கள் இன்றியும், அமைதியாகவும் நடத்த சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் 2,000 ஊா்க்காவல் படையினா் உள்பட 17,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

ஆவடி மாநகர காவல்துறையின் சாா்பில் 3,500 போலீஸாா், 300 ஊா்க்காவல் படையினா், தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் 3,300 போலீஸாா், 350 ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 21,800 போலீஸாா், 2,650 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வழியாக மட்டும் கொண்டு வர வேண்டும் என இந்து அமைப்பினருக்கு காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள், உதவி மையங்கள், ராட்சத கிரேன்கள், படகுகள், கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

வழிபாட்டு இடங்கள், ஊா்வலப் பாதைகள், சிலைகளைக் கரைக்கும் இடங்களில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பா்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!