September 27, 2022

தமிழகத்தில் வரும் 21ம் தேதி 50 ஆயிரம் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. அதை தடுக்க தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வாக இருக்கிறது. மேலும் கொரோனாவின் மூன்று அலைகளால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நான்காம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அது குறித்து பல நடவடிக்கைகளை அரசு எடுத்து கொண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது, மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது.

அதனால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஒரு சில மாவட்டங்களில் மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை தடுக்க தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் வருகிற 21 ஆம் தேதி 50,000 சிறப்பு முகாம்கள் மூலம் கொரோன தடுப்பூசி – பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட இருப்பதாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!