April 20, 2024

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட்

இந்திய சந்தையில் 5ஜி கனெக்டிவிட்டி இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது. 5ஜி வெளியீட்டை தொடர்ந்து கூகுள் நிறுவனம், பிக்சல் ஸ்மார்ட்போன்களில் 5ஜி சப்போர்ட் வழங்குவதற்காக இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அறிவித்தது.

எனினும், எப்போது இதற்கான அப்டேட் வழங்கப்படும் என எவ்வித தகவலையும் வழங்கவில்லை. தற்போது இதற்கான பதிலை கூகுள் தெரிவித்து இருக்கிறது. அதன்படி பிக்சல் 6a, பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 5ஜி சப்போர்ட் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறது.

“5ஜி சேவையை வழங்கும் விவகாரத்தில் இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 6a மாடல்களுக்கு 2023 முதல் காலாண்டு வாக்கில் அப்டேட் வழங்க திட்டமிட்டுள்ளோம்,” என கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த முறையும் சரியான வெளியீட்டு விவரத்தை கூகுள் தெரிவிக்கவில்லை. எனினும், 2023 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பிக்சல் 6a, பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது.

ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்காத சில நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் இருக்கிறது. தற்போது சாம்சங், ஒன்பிளஸ், ஒப்போ, விவோ போன்ற நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கிவிட்டன.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ் மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மற்றும் ஐபோன் SE 2022 மாடல்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கியது. இதுதவிர சியோமி நிறுவனம் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!