90 ஆண்டுகள் பழமையான மெதுசெலா மீன்

கலிபோர்னியா: மிகவும் பழமையான மீன்… சுமார் 90 ஆண்டுகள் பழமையான மெதுசெலா என்ற மீன், உலகின் மிகவும் பழமையான மீன் என்று நம்பப்படுகிறது.
அத்திப்பழங்களை சாப்பிடவும், வயிறு பகுதியை மெலிதாக வருடிக் கொடுக்கவும் விரும்பும் மெதுசெலா மீன், உலகின் பழமையான மீன் என்று நம்பப்படுவதாக கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸின் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ள்னர்.
சுமார் 90 வயதுடையது என்று நம்பப்படும் இந்த மீன், 4 அடி நீளம் (1.2 மீட்டர்), 40 பவுண்டு (18.1-கிலோகிராம்) எடை கொண்ட ஆஸ்திரேலிய நுரையீரல் மீன்வகை ஆகும், இது 1938 இல் ஆஸ்திரேலியாவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நுரையீரல் மற்றும் செவுள்களைக் கொண்ட பழமையான இனமான இந்த ஆஸ்திரேலிய நுரையீரல் மீன், நில மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு இடையேயான பரிணாம இணைப்பாக நம்பப்படுகிறது.