July 2, 2022

வடகொரியாவில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பியாங்யாங் : சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தோன்றியது. அதன்பின் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை கொரோனா பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பிடியில் சிக்காமல் இருந்த வடகொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை வேகமாக பரவுகிறது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் தொற்றுக்கு 2 பேர் பலியாகினர்.

இதனால் இதுவரை இந்த தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12-ந் தேதிதான் அங்கு கொரோனா பரவலை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்து பொதுமுடக்கத்தை அமல்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!