May 21, 2022

மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம்

சென்னை: மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம் வழங்கப்பட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயணத்தை அறிவித்தது. தற்போது மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஒருவரின் உதவி தேவையாக உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் ஒரே ஒரு மாற்றுத்திறனாளி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். அவர்களுக்கு பேருந்துகளில் ஒதுக்கப்பட்ட இருக்கையில் வேறு பயணிகள் அமர்ந்திருந்தாலும் அவர்களை எழச்செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மத்திய அரசின் மாற்றுத்திறனாளி அசல் அட்டையை ஆதாரத்தின் அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுடன் ஒரு உதவியாள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யலாம். தமிழகம் முழுவதும் இந்த அனுமதி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!