December 8, 2022

பல வருடத்திற்கு பேசப்படும் இந்திய வீரர்களின் புகைப்படம்….

ஆஸ்திரேலியா :ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 45 போட்டிகள் அடங்கும். இந்தத் தொடரில் முதல் சுற்று, சூப்பர் 12 மற்றும் நாக்-அவுட் ஆகியவை அடங்கும். சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி குரூப் 2ல் இடம் பெற்றுள்ளது.

இதே பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் உள்ளன. இந்தப் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற இரு அணிகளும் மோதுகின்றன. இந்த தொடர் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சூப்பர் 12 சுற்றில் வரும் 23ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பயிற்சி போட்டி மற்றும் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி முன்கூட்டியே புறப்பட்டு சென்றுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள், அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் புகைப்படத்திற்கு உற்சாக போஸ் கொடுத்துள்ளனர்.

இந்திய அணிக்காக களத்தில் விளையாடும் வீரர்கள் ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பயிற்சியாளர் உள்ளிட்ட அணி ஊழியர்கள் மறுபுறம். இந்தப் புகைப்படத்தில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், சாஹல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அஷ்வின், தீபக் ஹூடா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய 14 வீரர்கள் உள்ளனர்.

இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவர்கள் தவிர ரிசர்வ் வீரர்களும் அணியில் உள்ளனர். அவர்களும் விரைவில் அணியில் இணைவார்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழு ஆர்வத்துடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். இது இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!