May 21, 2022

சவுதி அரேபியாவில் திகில் அனுபவங்கள் தரும் ரெஸ்டாரண்ட்

ரியாத் : சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் ஷேடோஸ் ரெஸ்டாரண்ட் அமைந்துள்ளது. இந்த ரெஸ்டாரண்ட்டில் வித்தியாசமான திகில் நிறைந்த அனுபவங்களை வழங்க, உணவு மேஜை அருகில் மனித எலும்புக்கூடுகள், ஜாம்பிக்கள், இரத்தக் காட்டேரிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், ஷேடோஸ் ரெஸ்டாரண்டில் உணவு பரிமாறும் ஊழியர்கள் கோரமான உடைகளில் பயமுறுத்தும் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். திகில் நிறைந்த அனுபவத்தை நமக்கு குறைவில்லாமல் கொடுப்பதற்காக ஜாம்பி உடைகளில் நடிகர்களும் இருக்கின்றனர்.

ரெஸ்டாரண்டைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்ற ஒருவர், நான் வேடிக்கையான அனுபவத்தை எதிர்பார்த்து இந்த ரெஸ்டாரண்டிற்கு வந்தேன். ஆனால் இந்த ரெஸ்டாரண்டின் சூழல் திகிலான, அதிக பயம் நிறைந்த அனுபவத்தை தந்தது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!