August 12, 2022

ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தின் டீஸரை வெளியிட அட்லி முடிவு

சென்னை: பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வரும் அட்லி அந்தப்படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ, தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி பட்டியலில் வலம் வந்தார்.

இதனை தொடர்ந்து அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருவது அறிந்ததே. இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அட்லீ இயக்கி வரும் இப்படத்தின் தலைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘ஜவான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், டைட்டிலுடன் கூடிய ஒரு டீசரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரியப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!