April 18, 2024

அக்சென்சர் ஐ.டி. நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு… கலக்கத்தில் பணியாளர்கள்

நியூயார்க்: உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் அடுத்த 18 மாதங்களில் 19,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சில நாட்கள் முன்பு அறிவித்திருந்தது.

இந்த பணி நீக்கம் செயல்முறை எப்போது தொடங்கும், எந்த துறைகளில் அதிகம் பணி நீக்கம் இருக்கும் என்பது குறித்து எவ்விதமான தகவல்களை அக்சென்சர் வெளியிடவில்லை, இதனால் இந்நிறுவன ஊழியர்கள் பீதியிலேயே இருந்தனர்.

அக்சென்சர் நிறுவனம் அயர்லாந்து நாட்டு நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வருகிறது, இதனால் இந்த 19000 ஊயழிர்கள் பணி நீக்கத்தில் இந்தியாவில் அதிக ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அக்சென்சர் நிறுவனத்தின் HR அணி யாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பட்டியலை தயாரிக்க துவங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அக்சென்சர் அடுத்த 18 மாதத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 2.5 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதுவரையில் எந்த ஊழியர்களுக்கும் பணிநீக்கம் அறிவிப்பை வெளியிடாத அக்சென்சர் எப்போது பணிநீக்கத்தை துவங்கும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. அக்சென்சர் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 7,21,000 பேர் இதில் 40 சதவீதம் பேர் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர்.

அக்சென்சர் ஊழியர்கள் எண்ணிக்கை டிசிஎஸ் நிறுவனத்தை காட்டிலும் அதிகம். அக்சென்சர் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகத்திலும் அதிகப் படியான பணி நீக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் அக்சென்சர்-ன் இந்த MASS LAY OFFல் அடிமட்ட ஊழியர்கள் முதல் உயர் பதவி ஊழியர்கள் வரையில் பாதிக்கப் படுவது நிச்சயம் என்கிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!