August 20, 2022

விலை உயர்ந்து கொண்டே இருக்கும் பஞ்சு; பருத்தி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

ராமநாதபுரம்: பருத்தி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்… ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் போகமாக பருத்தி, பயறுவகை, தாணியங்கள் சாகுபடி செய்ய வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்ற பஞ்சு தற்போது ரூ.60 முதல் ரூ.87 வரை விலை கிடைக்கிறது. பருத்தி சாகுபடியில் விவசாயிகள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடக்கிறது. குறிப்பாக சத்திரக்குடி, பரமக்குடி, உத்திரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்கின்றனர்.

இவ்வாண்டு மழை காரணமாக ஊரணிகளில் தண்ணீர் உள்ளதால் பருத்தி சாகுபடி அதிகரித்துள்ளது. மேலும் வெளியூர்களிலிருந்து பருத்தி பஞ்சு வரத்து குறைந்துள்ளதால் ராமநாதபுரம் சந்தையில் பஞ்சு விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.87 வரை விலைபோகிறது. இனிவரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரம் ஆணைக்குடி விவசாயி மாரி கூறுகையில், ‘2 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளேன். இங்கிருந்து பஞ்சு மொத்த வியாபாரிகள் மூலம் ராஜபாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது அதிக விலை கிடைப்பதாலும், ஊரணிகளில் தண்ணீர் உள்ளதால் நிறைபேர் சாகுபடி செய்கின்றனர்,’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!