May 21, 2022

அனா புயலால் உருக்குலைந்துபோன ஆப்பிரிக்க நாடுகள்

மாபுடோ : ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளை அனா என்ற வெப்ப மண்டல புயல் கடுமையாக தாக்கியது. அதன்பின் பெய்த பேய்மழையால் 3 நாடுகளில் பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன. இதனால், எண்ணற்ற நகரங்களை நாசமாகின.

இந்த இயற்கை பேரிடர்களால் மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,30,000 பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். மலாவி நாட்டில் புயல், மழை வெள்ளத்தால் 11 பேர் இறந்தனர். அங்குள்ள பல்வேறு நகரங்கள் பேரழிவு நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மலாவி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொசாம்பிக்கில் அனா புயலால் 18 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் வெள்ளத்தில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், டஜன் கணக்கான பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவை இடிந்து தரைமட்டமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!