December 8, 2022

மீண்டும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா?…அதிர்ச்சியில் ரசிகர்கள்…

மும்பை : ஐஸ்வர்யா ராய் 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் இருவர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அது மட்டும் அல்லாமல் இந்தி, பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், 2007-ம் ஆண்டில் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஆராதியா என்ற மகள் இருக்கிறார். திருமணத்துக்கு பின்னரும் ஐஸ்வர்யா ராய் பல படங்களில் நடித்தார்.

முக்கியமாக தமிழில் ‘ராவணன்’, ‘எந்திரன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது அவரது நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அவரது ‘நந்தினி’ கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

தற்போது ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சற்று குண்டாகவும், பூரிப்பாகவும், மகிழ்ச்சிவுடனும் காணப்பட்டார். ஆனாலும் இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்து எந்த விளக்கமோ, மறுப்போ வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!