November 28, 2022

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ் அப்டேட்…

சென்னை : தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி படத்திற்கு ‘பர்ஹானா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெற்றுள்ளார். இந்த படத்திற்கு கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்ரன் பாடல்களை எழுதியுள்ளார்.

இதுதவிர செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.அதனால் இப்போது இருந்ததே ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலல் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!