படப்பிடிப்பில் ரசிகருடன் அஜித்… செம வைரலாகும் புகைப்படம்

சென்னை: சில நாட்களாக AK 61 ஷூட்டிங்கில் இருந்து அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி ரசிகர் ஒருவருடன் அஜித் எடுத்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இதில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதன்படி மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து நேற்று நடிகர் மகாநதி ஷங்கரும் அப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக AK 61 ஷூட்டிங்கில் இருந்து அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது கருப்பு நிற சட்டையில் அஜித் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.