பாஜகவை விவசாயிகள் மன்னிக்க மட்டார்கள் – அகிலேஷ் யாதவ்

லக்னோ : உத்தர பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இந்நிலையில் கர்ஹால் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தன் மனைவியுடன் ஜஸ்வந்த் நகரில் ஓட்டு போட்டார்.
அதன்பின் அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில், உத்தர பிரதேச தேர்தல் மூலம் பாஜக ஓரங்கட்டப்படும். பாஜகவை விவசாயிகள் மன்னிக்க மட்டார்கள். இதுவரை நடந்த 2 கட்ட தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றி உறுதியானதாக கூறினார்.
மேலும், பெண் காவலர் ஒருவர் கடத்தப்பட்டு வாய்க்காலில் இறந்து கிடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக குற்றம் சாட்டினார்.