September 30, 2022

ஸ்டேட் வங்கி சார்பில் மதர் தெரசா அறக்கட்டளைக்கு ஆம்புலன்ஸ் வழங்கும் விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இயங்கி வரும் மதர் தெரசா அறக்கட்டளைக்கு ஸ்டேட் வங்கி சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கும் விழா நடந்தது.

ஸ்டேட் வங்கி இந்தியா தனது சமூக பொறுப்புணர்வு (CSR) மூலமாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர பல்வேறு விதமான சமூக பணிகளுக்கு உதவி வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மதர் தெரசா அறக்கட்டளை நிர்வகித்து வரும் மதர் தெரசா நலவாழ்வு மையம் என்ற மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கும் விழா தஞ்சையில் நடைபெற்றது.

இதில் ஸ்டேட் வங்கி சென்னை வட்டார முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முற்றிலும் குளிரூட்டப்பட்ட அனைத்து மருத்துவ வசதிகளையும் உள்ளடக்கிய ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸை ஸ்டேட் வங்கி CSR நிதி மூலமாக மதர் தெரசா அறக்கட்டளைக்கு அதன் தலைவர் சவரிமுத்து மற்றும் குழுவினரிடம் வழங்கி பேசுகையில், அறக்கட்டளையின் சேவைப்பணிகள், அடித்தட்டு மக்களுக்கு சிறப்பான வகையில் மருத்துவப்பணியாற்றுவது போன்றவற்றை பாராட்டினார். ஆம்புலன்ஸ் சேவையானது மேலும் உதவிகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் சிவக்குமார், மண்டல மேலாளர் ஆல்வின் மார்ட்டின் ஜோசப், உதவி பொது மேலாளர் திரு வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்டேட் வங்கி மேலாளர்கள் மற்றும் மதர் தெரசா அறக்கட்டளை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!