October 2, 2022

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மீது தாக்குதல்

நியூயார்க் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்றார்.

அப்போது மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சல்மான் ருஷ்டியின் கழுத்தில் குத்தினார். இந்த தாக்குதலால் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் கத்தியால் குத்திய நபரை தடுத்து நிறுத்திப்பிடித்தனர்.

அதன்பின், மருத்துவ ஹெலிகாப்டரில் சல்மான் ருஷ்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!